Archive for July, 2010

பெண்

நிறைய கோபம்
கொஞ்சம் சண்டைகள்
அவள் நண்பர்களிடம் …..

கொஞ்சம் ஆசைகள்
நிறைய  பாசங்கள்
அவள்  சொந்தங்களிடம்

எதிர்பார்பே இல்லாத
காலங்களில் …
எல்லாமே கிடைத்தது
எதிர்பாராமல் ……

எல்லாவற்றையும்  விட்டே
வருகிறாள் ….இன்னொரு
வீட்டிற்கு   மகாராணி ஆஹும் போது…

சில நேரம் கோபங்கள்
நிறைய நேரம் சண்டைகள் …..

நிறைய ஆசைகள் …
சில மகிழ்ச்சிகள்…

இப்படியே போகும் அவளின்
பயணம் …

சில நேரம்
சொல்வதுண்டு ..
பல நேரம்
சொல்லாமல் அழுவதுண்டு …

எதையும் தங்குவாள்
தன் அன்பினால் !!!!!

நட்சத்திரம் …

இரவு பிச்சைக்காரியின்
ரவிக்கை பொத்தல்கள்!!!!

நிலா சிறுமி மார்கழி
நோன்பிற்கு
கோலம் போட
தப்பு தப்பாய்
வைத்த புள்ளிகள் !!!

காதலியை காணாது
தவித்து காதலன்
விட்ட கண்ணீர் துளிகள் .!!!….

மறக்கவே நினைக்கிறன்…

உன்னை நினைக்கும் போது
என்னுள் கோடி பட்டாம் பூச்சிக்கள்
சிறகடித்து பறக்கின்றன ….
உன் பார்வையில்
என்னுள் கோடி பூக்கள்
மலர்கின்றன ….
உன்னை மறக்கவே
நினைக்கிறன்
மறந்தாலும் நினைக்கிறன்
எல்லாமே எனக்காய்  செய்தாய்
என்னை கேட்காமலே
என்னுள் வந்தாய்
ஏனோ !!
மனதை விட்டு செல்ல மறுக்கிறாய் !!!!

நிலா…

 

நிலவு என்பது தங்க தட்டு ….
விண்மீன்கள் வெள்ளி புள்ளிகள் !!!!
ஒரு தேவதை …
வானம்  அதில் கோலம் போட
தங்கத்தட்டு கொண்டு வந்தாள்…
கதிரவன் காலையில் வர
காண வெட்கபட்டு
அதை அங்கேயே விட்டு சென்றாள்..
கோலம் முடியாமல் …வெறும்
புள்ளிகளாகவே இருக்கின்றன !!!!

மீண்டும் !!!!!

என்னை பிடிச்சிருக்கா
என்று நான் கேட்ட நாள்
வேண்டும் மீண்டும் !!!!

எனக்கு கொஞ்சம் டைம்
வேண்டும் என்று நீ
கேட்காத நாள் வேண்டும்
மீண்டும் !!!

என்னை ஆசையில்
தவிக்க விட்ட நாட்கள்
வேண்டும் மீண்டும் !!!

இருவரும் ஒரே பாட்டை
ரசித்த நாட்கள் வேண்டும்
மீண்டும்!!!

எனக்காக நீ அழுத நாட்கள்
வேண்டும் மீண்டும் !!!

என் கவிதைகளை நீ
ரசித்த நாட்கள் மீண்டும்
எனக்காய் வேண்டும் !!!

என் கனவுகளில்
என்னை தூங்க விடாமல்
நீ கொஞ்சிய நாட்கள்
வேண்டும் மீண்டும் !!!

காதல் வேதனை
அனுபவித்த நாட்கள்
வேண்டும் மீண்டும் ..

அன்பே !! உன்னை மீண்டும்
காதலிக்கும் உரிமை
எனக்கே வேண்டும் …

ரிங் அடிக்கும் போன் அதை
நீயே எடுக்க வேண்டும்
என்று நான் தவித்த நாட்கள்
வேண்டும் மீண்டும் …

பிறர் எடுத்தல் கட் செய்து
கோபத்தில் நான் மூட் அவுட்
ஆஹும் நாட்கள் வேண்டும்
மீண்டும்

உன் யதார்த்த பார்வையை கூட
காதல் பார்வையாய் நான்
கற்பனை செய்த நாள்
வேண்டும் மீண்டும் மீண்டும் !!!!

ஒரு நொடியேனும்!!!!

பிரிவின் வலியை உன்னால்
உணர்ந்தேன் !!!
ஒரு நொடி கூட உன் நினைவுகள்
என்னை விட்டு செல்வதில்லை ….
ஏனோ நீ சென்றாய் …
உன் வருகை அதையே என் மனம்
எதிர்பார்த்து காத்திருக்கிறது …
உன்னை சந்தித்த அந்த கடைசி
நிமிடங்கள் என்னை கடக்க வில்லை
இன்னும் ….
உன்னை பார்த்த என் கண்கள் இன்னும்
தூங்க வில்லை …
நீயும் இப்படி என்னை ஒரு
நொடியேனும் யோசிப்பாயா ?

நீயே சொல்லிவிடு …..

உன் பெயரையே சுவாசிக்கிறேன்
தினமும் ….கோடி முறை ….
உன் கண்களையே  காண தவிக்கிறேன்
நீயோ தவிர்க்கிறாய் ….
என் ஆசைகள் எல்லாமே உனக்கு
வேடிக்கையாய் இருக்கிறது !!!
ஏதோ அலைகள் சொல்ல வந்து
சொல்லாமல் போவதை போல …
என்னுடனே இருக்கிறேன் என்கிறாய்
இருந்தாலும் .உன் வார்த்தை …
அதையே எதிர்பார்க்கிறது  என் மனம் !!!!
உன் மௌனம் அதை என் மனம்
அறியாது !!!!
சொல்ல நினைத்ததை சொல்லிவிடு …