Archive for August, 2010

குழி பணியாரம் …..

தேவையானவை :
——————————-

பச்சரிசி — 1 கப்
புழுங்கல் அரிசி — 1 கப்
வெந்தயம்  — 1 ஸ்பூன்
உளுந்து பருப்பு — 1 /4  கப்
பனை வெல்லம் — 1 /4  கப் ( பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து சிம்  இல் வைக்கவும் ..தானாக கரைந்தவுடன்  அரைத்த மாவில் சேர்க்கவும் )
தேங்காய் துருவல் –கொஞ்சம்
ஏலக்காய் — 2  தட்டியது .
( எல்லாவற்றையும் 2 மணி  நேரம் நன்கு ஊற வைத்து அரைக்கவும் )
செய்முறை :
———————

*மாவு அரைத்து ௨ மணி நேரம் கழித்து வெல்லம் பாகு …தேங்காய் துருவல் ,ஏலக்காய் எல்லாவற்றயும்
சேர்த்து  கரைக்கவும் ..

*குழி பணியார pan  இல் எல்லா குழியில் சிறிது எண்ணெய் விட்டு ..காய்ந்ததும் மாவை ஊற்றவும் ..
*நன்றாக வெந்ததும் மெல்ல எடுக்கவும் ..
* நல்ல சத்தான  உணவு ..

Advertisements

மழை !!!!

ஒரு மழை காலம் ….
அதில் எவ்வளவு சந்தோசங்கள் …
எப்போதும் கிடைக்காது !!!
மழையை ரசிக்கையில்
உன்னில் நனைகிறேன் ….
மழையை எப்படி
ரசிக்க …
முதல் தூறல்கள் …
நம் சந்திப்பை
நினைவூட்டுகின்றன …
பேசியும்  பேசாமலும்
பேசினோம் ….
நாட்கள் கடந்தன
அடை மழையாய்!!!!
உன் நினைவுகள் ….
உன்னை சந்திக்க முடியாமல்
போனேன் …
புயல் மழையாய் நீ ..!!!!.
உருமாறி போனாய்
மழையின் கடைசி தூறல்களோ
நம் நினைவுகளை
சொல்லி விட்டு சென்றது !!!!!

பாராட்டுகள் அவசியம் !!!!

இன்றைய உலகில் இலவசமாக கிடைப்பது எது தெரியுமா ??? விமர்சனம் ,உபதேசம் ..மட்டும் தான் ..
அதிலும் பக்கத்துக்கு வீட்டில் புதிய கார் வங்கி இருந்தாலோ …புது வீடு வாங்கி இருந்தாலும்
நம்மில் எத்தனை பேர் மனசார பாராட்டுகிறோம் ..அது சரி இல்ல …இது சரி இல்ல அப்படி எதோ குறை சொல்றோம் .
இதே தன பல பெரிய படங்கள் தோல்வி அடைகிரதுக்கு பெரிதும் காரணம்..படம் வெளி வந்து ஒரு காட்சி
முடிவதற்குள் இணைய தளத்தில்..படத்தில் ஒண்ணுமே இல்லையாம்…மொக்கை ..சப்பை ..என்றல்லாம்
போட்டு விடுகின்றனர் ..இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் ,நடிகர்கள் ,ஒவ்வொரு நபரும் எவ்வளவு மனதால்
கஷ்டபடுகின்றனர்..

ஒரு படமோ  ஒரு காரியமோ பண்றது அவ்வளவு எளிதில்ல ..எவ்வாளவோ கஷ்டபடுகின்றனர்..நம்மால் பாராட்ட முடியவில்லை என்றாலும் கிண்டல் பண்ணாமல் இருக்கலாம் .நம்மால் அவர்கள் பண்ணியதில் எவ்வளவு பண்ண முடியும் என்று யோசித்து விட்டு குறை கூறனும் ..பாராட்டுகள் இருந்தாலே நிறைய வெற்றிகள் வரும் யாருக்கும் ..
ஒருவரை எவ்வளவு கிண்டல் பண்றோமோ ..அவர்கள் மனதார வருத்த படுவர். அவர்களின் வளர்ச்சிகள் பாதிக்கும்.
ஒரு சின்ன குழந்தையிடம் very  good  என்று சொல்லி பாருங்கள் ..அடுத்த முறை இன்னும் அழகாக பண்ணும் ..அதுவே பாராட்டின் அதிசயம் ……எல்லோரோட மனசும் ஒரு சின்ன பாராட்டுக்கு தாங்க ஏங்கி கிடக்கு …. இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா ?????

நிறை சொல்ல முடியா விட்டாலும்
குறை சொல்லாமல் இருங்கள் ..அன்றும் …. இன்றும் ..

அன்று காதலின் சோகத்தில்
என்னை கண்டு வானம்
கதறி அழுததாய்
வர்ணித்த நான் ….
இன்று
நம் மேல் வானம்
பூ மழையாய் பொழிகிறது
என்று கவி பாடுகிறேன் !!!!!!

அன்று… காதலின் வேதனையில்
புல்வெளியும் கண்ணீர் விட்டது
தான் பனித்துளி என்றேன் !!!!
இன்றோ ….
பனி காதலன் புல்வெளி காதலியை
முத்தமிட்ட துளிகளாகவே
எழுதுகிறேன் …

அன்று காதலின் வேகத்தில்
தென்றலும் என்னை
தழுவ வேண்டாம்
என்று எண்ணினேன் …
இன்றோ …
என் காதலியே தென்றலாக
எண்ணுகிறேன் ..

அன்று ..கனவுகளில்
எவர் வந்தாலும் கோபம்
மூட்டும்…
இன்றோ …
என்னுடன் நீ வரும் கனவை
எல்லோரும் பார்க்கவே தவிக்கிறேன் …..

படங்கள் சொல்லும் கதை !!!!!

சாப்பாட்டிற்கு தானே பணம் தேவை !!!!
அன்பிற்கு இல்லையே!!!
அன்பு ஒன்றே விலை அறியாது!!!!


உணவு கிடைப்பது
அரிதாய் இருக்கும் நேரம் !!!
சாப்பிட பாத்திரம் தேவை படாது !!!


அடுக்கு மாடிகள் உள்ள நகரிலே …
குப்பையும் கொட்டி கிடக்குது !!!!
கொட்ட ஆள் இருக்கிறது ..
அள்ள ஆள் இல்லையே …


சில பேருக்கு வீட்டில் எப்போவும்
காற்றாடி இருக்கனும் …
சில பேருக்கு குளிர் சாதன பெட்டி
ஆனால்… பல .
பேருக்கோ  மழை வெயிலுக்கு
ஒதுங்க கொஞ்சம் இடம் !!!!!

நாம் எல்லோருமே வருந்த வேண்டிய விஷயம் இது …இந்த படங்கள் எல்லாமே
நாம் இந்தியாவை பிரதிபலிகின்றன …நாம் இந்தியா எவ்வளவு துறையில் முன்னேறினாலும்

வறுமை என்று ஒழியுமோ ?????

HOT SOUPS !!!!!!

இப்போ நிறைய இடங்களில் சூப் ஒரு முக்கியமான வியாபாரமாக ஆஹிவிட்டது …
அது பற்றி சில
விஷயங்களை சொல்ல விரும்புகிறேன் …சூடாக இருக்கிறது என்று
எல்லோருமே சாப்பிடுகிறோம் …VEG  சூப் , வாழைத்தண்டு சூப் , காளான் சூப் என்று நிறைய
வகைகள் ..அதில் எதிலுமே உண்மையான பொருட்கள் சேர்ப்பதில்லை …வெறும் சோள மாவும்
அஜினோமோட்டோ  தான் …இது நிறைய சேர்கிறார்கள் …இதை சாப்பிடாமல் இருப்பது நல்லது
குழந்தைகளுக்கும் வேண்டாமே.. நாமே வீட்டில்  செய்யலாம்  healthy  ஆக …. வெளியில் சாலையில்
விற்கும் சூப் சாப்பிட வேண்டாம் …..

veg  சூப் :
—————


தேவையானவை :
——————————–

முட்டைகோஸ்   —-  கொஞ்சம்
காரட் — கொஞ்சம்
பீன்ஸ் —- கொஞ்சம்
சின்ன வெங்காயம் — கொஞ்சம்
கொத்துமல்லி இலை—கொஞ்சம்
கருவேப்பிலை —கொஞ்சம்

செய்முறை :
———————–
1 .. எல்லாவற்றையும்  குக்கர் இல் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும் ..
2 .10  நிமிடங்கள்  வேக வைத்த பின்னர் ..கொஞ்சம் சோள மாவை தண்ணீர் இல் சேர்த்து
கலக்கவும் ..
கடைசியாகஉப்பு
,
மிளகு தூள் …சீரக தூள் சேர்க்கவும் …மல்லி இலை சேர்த்து சூடாக பரிமாறவும் …


தூர உறவு !!!

ஒரு அழகிய கிராமம் !!!! அன்பான அம்மா அப்பா … ஆசைக்கு ஒரே மகன் ..ராஜு .எல்லா பாசத்தையும் அவனிடமே காட்டினர்.
கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர் ..மகனின் ஒவ்வொரு பிறந்த நாளிற்கும் குடும்பமாக கோவிலுக்கு செல்வது வழக்கம்

ஆசைப்பட்டது எல்லாமே கிடைத்தது ராஜுவுக்கு ..அப்பாவின் கனவு U.S .அப்படியே வேலையும் கிடைத்தது.அம்மாவை விட அப்பாவே பிரிவை அதிகம் உணர்ந்தார் .ஆம் ராஜு அப்பா செல்லம் .வெளிநாடு சென்றான் .
வருடம் ஒரு முறை இந்தியா வருவான் ராஜு .வருடங்கள் ஓடின .பாசமும் கரைந்தது .ராஜுவிடம் !!!..

அப்பாவின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசம் ஆனது .ராஜு வை நினைத்து தான்.ஒரு முறை வந்தான் ராஜு.அப்பாவை பார்த்து விட்டு சென்றிருந்தான் .அடுத்து அடுத்த வருடம் தான் ..போன அடுத்த மாதமே  அப்பாவின் உடல் நிலை  மிகமும் மோசம் ஆனது..அம்மா ராஜுவை இந்தியா அழைத்தாள்.. அனால் அவன் இப்போ தானே வந்தேன் ..வீண் செலவு ..வர முடியாது.. என்று சொல்லி விட்டான்..எவ்வளவு செலவு ஆஹுமோ சொல்லுங்க ..அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி விட்டான் ..அம்மா வினால் அப்பாவிடம் சொல்ல முடிய வில்லை..அப்பாவின் மனதின் வேதனை அவள் நன்கு அறிவாள்..ஒரு நாள் தொலை பேசியில் அழைத்தாள் ராஜுவை.அம்மா சொல்லுங்க..”எவ்வளவு பணம் அனுப்பி வைக்க “..அம்மா அழுது கொண்டே “ஒரு நூறு ருபாய் போதும் ராஜு”..என்றாள்.அவனுக்கு புரிய வில்லை. அம்மா “ஒரு மலர் வளையத்தின்  விலை நூறு ருபாய் தான் ராஜு”..என்றாள்..தூர உறவின் முடிவு இதுவே ….பாசம் எப்போவும் விலை போகாது !!!!