அன்று காதலின் சோகத்தில்
என்னை கண்டு வானம்
கதறி அழுததாய்
வர்ணித்த நான் ….
இன்று
நம் மேல் வானம்
பூ மழையாய் பொழிகிறது
என்று கவி பாடுகிறேன் !!!!!!

அன்று… காதலின் வேதனையில்
புல்வெளியும் கண்ணீர் விட்டது
தான் பனித்துளி என்றேன் !!!!
இன்றோ ….
பனி காதலன் புல்வெளி காதலியை
முத்தமிட்ட துளிகளாகவே
எழுதுகிறேன் …

அன்று காதலின் வேகத்தில்
தென்றலும் என்னை
தழுவ வேண்டாம்
என்று எண்ணினேன் …
இன்றோ …
என் காதலியே தென்றலாக
எண்ணுகிறேன் ..

அன்று ..கனவுகளில்
எவர் வந்தாலும் கோபம்
மூட்டும்…
இன்றோ …
என்னுடன் நீ வரும் கனவை
எல்லோரும் பார்க்கவே தவிக்கிறேன் …..

Advertisements