உன்னை சந்தித்த
அந்நாளை நீயும்
நானும் மறக்க வில்லை ….
அன்று …
உன்னுடன் பேசிய
முதல் மொழியை
உன்  கண்கள்
மறுக்க வில்லை ..
உன்னை நாளையும்
பார்ப்பேனோ ?
என்று ஏங்கவும்
இல்லை…..
உன்னுடன் வாழ்ந்த
அந்த நொடிகளை
மறக்கவே இன்று
நினைக்கிறேன்…
மறந்தாலும் நினைக்கிறேன்.
மழையில் நனைந்த
வண்ணத்து பூச்சியை போல்
தவிக்கிறேன் …

Advertisements