Archive for October, 2010

நினைவை அழிக்காதே !

 

என்னுடன் பேசாத உன்

உதடுகள் என்ன
சொல்கின்றன ?
என் பெயரை தானே ??
@@
என் நினைவை
நினைக்காத உன் மனது
யாரை தேடுகின்றன ?
நம் நினைவுகளையா ? ?
@@
உன்னுடன் பேசிய
வார்த்தைகளும்
உன்னுடன் வாழ்ந்த
என் மனதும் …இன்று
என்னையே வெறுக்கின்றன ??
@@
நாம் கடந்த சாலைகள்
நாம் ரசித்த பாடல்கள்
இன்று புதிதாய் …
கண்ணீரை தருகின்றன
காணிக்கையாய் !!!
@@
உன் நினைவுகளில்
என் நினைவுகள்
இல்லாது போனாலும் …
என் நினைவுகளில்
உன் நினைவுகள்
அன்றும் .
இன்றும் .
என்றும் .!!!
@@@
Advertisements

மரங்களை வெட்டுங்கள் ….


உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் ‘மரங்களை நடுங்கள்’ என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் ‘மரங்களை வெட்டுங்கள்’ என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ‘ ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ‘  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
 


மண்ணின் வில்லன்அமெரிக்க தாவரவியல் பூங்கா , ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் ‘காட்டு கருவேல மரம்’ தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ‘ யாம் அறியேன் பராபரமே’


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல…., இப்போதைய  பிரச்சனை….!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.  முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.இதன் கொடூரமான குணங்கள்இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.  பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது,
( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல…! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது…!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது….. ??!!
இப்படி காற்றின் ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக
மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும்
உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்….?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமே நச்சுதன்மையாக  மாறிவிடுகிறது
.


அறியாமைநமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.கேரளாவின் விழிப்புணர்வுநமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்…..!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.
ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்….??! என்ன முரண்பாடு…?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.நல்ல மரம் ஆரோக்கியம்வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம்
.


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.


மரங்களை
வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்….

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்…..!!! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!!

( ( இது எனக்கு வந்த மெயில் தான் . இருந்தாலும் எல்லோருடனும் பகிர விரும்புகிறேன் )

மீன் குழம்பு ..( ஆற்று மீன் )

 

விரால் மீன் —  ஒரு கிலோ
சாம்பார் வெங்காயம் — 10 உரித்து முழுசாக
வற்றல் —  10
சீரகம் — 8 ஸ்பூன் .
புளி – கால் கப் கரைத்தது .
செய்முறை :
———————
*  வற்றல் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும் .
( அம்மியில் அரைத்தால் கூடுதல் சுவை .)
*  புளி கரைத்தது ,மசாலா அரைத்தது இரண்டையும் ஒரு அடி கனமான பாத்திரத்தில் கலக்கவும்
*சாம்பார் வெங்காயத்தை தட்டி எடுத்து கொள்ளவும் .
* அதையும் மசாலா கலவையில் சேர்க்கவும் .
*100 ml நல்லெண்ணெய் சேர்க்கவும் கலவையில்
* தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
* மஞ்சள் தூள் சேர்க்கவும் .
* உப்பு சேர்க்கவும் .
* எல்லவற்றையும் கைகளால் நன்றாக கலந்து அடுப்பில் வைக்கவும் .
* நன்றாக கொத்தி வந்ததும் சிம் இல் வைத்து .சிறிது எண்ணெய் பிரிந்ததும் மீன் துண்டுகளை சேர்க்கவும் .
* 5 mins கழித்து அடுப்பை அணைக்கவும் .
* மீன் குழம்பு ரெடி .
( இந்த மீன் குழம்பு முறை …விருதுநகர் ஸ்பெஷல் .தேங்காய் சேர்க்காமல் செய்வது .வித்தியாசமான ஒன்று .மறு நாள் வரை கெடாமல் இருக்கும் .மறு நாள் சாப்பிடும் போது கூடுதல் சுவை தாங்க !!!!)

 

 

தனிமை .

அன்று
என் கண்ணீரை துடைக்க
நீ இருந்தாய் …
இன்று
என் கண்ணீராய் உருமாறி
போனாய் .. ??
பேசிய வார்த்தைகள்
என் காதுகளில் …
இன்றும்..

தொலைத்தாலும் தொலையாதது

உன் மேல் நான் கொண்ட
அன்பு …
எத்தனை நாள் என் இதயம்
சுமை கொள்ளும் ?
நீயே என் வாழ்வாகி போனாய்
என்று என் நிஜமாகி போவாய் ??

அழியா நினைவுகள் … கிடைக்காத சந்தோசங்கள் !!!!

என் சிறு வயதினில்…

என் பாட்டி வீடு சென்ற

ஞாபகங்கள் !!!

அலை மோதின என்னுள்…

இன்றும்….

நான் போகும் போது.

அன்று..

என் அன்னையின் கை பிடித்து.

இன்று..

என் மகளின் கை பிடித்து..

எத்தனை அழகான காலங்கள் …

போகாமலே நனைகிறேன்

நினைவுகளில்..

கிராமம் தான்..

எங்குமில்லா அமைதி ..

கிடைக்காத பாசங்கள்..

பார்க்காத மனிதர்கள்..

புரியாத மொழிகள்..

அங்கு மட்டுமே..

வயல் வரப்பில் நான்

நடந்தேன் அழகாய்..

முடியவில்லை

என் மகளால் ..

புதிய பாதை அவளுக்கு..

அம்மா

இது தான் “ரைஸ் செடியா?”

ஆம் என்றேன்

அவளிடம்..

இது போல் குட்டி குட்டி கேள்விகள்

அவளுக்கு..

புரிய வைத்தேன் நான்

தென்னையில்

உள்ள தூக்கணாங் குருவி கூடு !

அழகிய வீடு !

அடித்த காற்றில் கீழே விழுந்தது போல்.

.என் குட்டி தேவதை

அதை எடுத்துக்கொண்டாள்..

அவளின் பார்பி பொம்மைக்கு

இனி அது வீடாம்..

தாகம் என்று நினைக்கையில்

தோட்டக்காரன் நின்றான்

இளநீரோடு!

ஆசை தீர தாகம் தனித்தோம்..

வயல்வெளியில்

விவசாயிகளின் பாடலோடு வேலை ..

புரியவில்லை அவளுக்கு..

புரிந்தது அவர்களின்

கபடமில்லா பாசம் ..

வயல் பார்த்து

பம்ப் செட்டில் குளித்து

தென்னை ஓலையில்

குட்டி தூக்கம் போட்டு

களைத்து வீடு வருகையில்..

வாசம் துளைத்தது

பாட்டி வைத்த மீன் குழம்பு..

ஆசையாய் சாப்பிட்டோம்

பாட்டியின் பாசத்தையும் சேர்த்து.

ஐயோ…  இன்னும் எத்தனையோ !!!

விவரிக்க வார்த்தைகள் போதாதே..

என் மகளுடன் நானும்

குழந்தையாய் ஏங்குகிறேன் ..

என்று வருமோ..

அடுத்த என் மகளின்

விடுமுறை நாட்கள் என்று ???

CUTE SMS :

A lovable story :

——————-

A FLIGHT  WAS FLYING THROUGH THE CLOUDS.SUDDENLY IT LOST THE BALANCE .EVERY ONE STARTED SHOUTING IN FEAR.BUT A SMALL BOY KEPT PLAYING WITH HIS TOY.AFTER AN HOUR FLIGHT LANDED SAFELY.A  MAN ASKED THE BOY “HOW COULD YOU PLAY WITH UR TOY WHEN EVERY ONE WAS AFRAID? ” THE BOY SMILED AND SAID ” MY DAD IS A PILOT ..I KNOW HE WILL LAND ME SAFELY ”

LOVE  IS ALWAYS TRUST ”