என் சிறு வயதினில்…

என் பாட்டி வீடு சென்ற

ஞாபகங்கள் !!!

அலை மோதின என்னுள்…

இன்றும்….

நான் போகும் போது.

அன்று..

என் அன்னையின் கை பிடித்து.

இன்று..

என் மகளின் கை பிடித்து..

எத்தனை அழகான காலங்கள் …

போகாமலே நனைகிறேன்

நினைவுகளில்..

கிராமம் தான்..

எங்குமில்லா அமைதி ..

கிடைக்காத பாசங்கள்..

பார்க்காத மனிதர்கள்..

புரியாத மொழிகள்..

அங்கு மட்டுமே..

வயல் வரப்பில் நான்

நடந்தேன் அழகாய்..

முடியவில்லை

என் மகளால் ..

புதிய பாதை அவளுக்கு..

அம்மா

இது தான் “ரைஸ் செடியா?”

ஆம் என்றேன்

அவளிடம்..

இது போல் குட்டி குட்டி கேள்விகள்

அவளுக்கு..

புரிய வைத்தேன் நான்

தென்னையில்

உள்ள தூக்கணாங் குருவி கூடு !

அழகிய வீடு !

அடித்த காற்றில் கீழே விழுந்தது போல்.

.என் குட்டி தேவதை

அதை எடுத்துக்கொண்டாள்..

அவளின் பார்பி பொம்மைக்கு

இனி அது வீடாம்..

தாகம் என்று நினைக்கையில்

தோட்டக்காரன் நின்றான்

இளநீரோடு!

ஆசை தீர தாகம் தனித்தோம்..

வயல்வெளியில்

விவசாயிகளின் பாடலோடு வேலை ..

புரியவில்லை அவளுக்கு..

புரிந்தது அவர்களின்

கபடமில்லா பாசம் ..

வயல் பார்த்து

பம்ப் செட்டில் குளித்து

தென்னை ஓலையில்

குட்டி தூக்கம் போட்டு

களைத்து வீடு வருகையில்..

வாசம் துளைத்தது

பாட்டி வைத்த மீன் குழம்பு..

ஆசையாய் சாப்பிட்டோம்

பாட்டியின் பாசத்தையும் சேர்த்து.

ஐயோ…  இன்னும் எத்தனையோ !!!

விவரிக்க வார்த்தைகள் போதாதே..

என் மகளுடன் நானும்

குழந்தையாய் ஏங்குகிறேன் ..

என்று வருமோ..

அடுத்த என் மகளின்

விடுமுறை நாட்கள் என்று ???

Advertisements