Posts from the ‘கவிதைகள்’ Category

நினைவை அழிக்காதே !

 

என்னுடன் பேசாத உன்

உதடுகள் என்ன
சொல்கின்றன ?
என் பெயரை தானே ??
@@
என் நினைவை
நினைக்காத உன் மனது
யாரை தேடுகின்றன ?
நம் நினைவுகளையா ? ?
@@
உன்னுடன் பேசிய
வார்த்தைகளும்
உன்னுடன் வாழ்ந்த
என் மனதும் …இன்று
என்னையே வெறுக்கின்றன ??
@@
நாம் கடந்த சாலைகள்
நாம் ரசித்த பாடல்கள்
இன்று புதிதாய் …
கண்ணீரை தருகின்றன
காணிக்கையாய் !!!
@@
உன் நினைவுகளில்
என் நினைவுகள்
இல்லாது போனாலும் …
என் நினைவுகளில்
உன் நினைவுகள்
அன்றும் .
இன்றும் .
என்றும் .!!!
@@@
Advertisements

தனிமை .

அன்று
என் கண்ணீரை துடைக்க
நீ இருந்தாய் …
இன்று
என் கண்ணீராய் உருமாறி
போனாய் .. ??
பேசிய வார்த்தைகள்
என் காதுகளில் …
இன்றும்..

தொலைத்தாலும் தொலையாதது

உன் மேல் நான் கொண்ட
அன்பு …
எத்தனை நாள் என் இதயம்
சுமை கொள்ளும் ?
நீயே என் வாழ்வாகி போனாய்
என்று என் நிஜமாகி போவாய் ??

அழியா நினைவுகள் … கிடைக்காத சந்தோசங்கள் !!!!

என் சிறு வயதினில்…

என் பாட்டி வீடு சென்ற

ஞாபகங்கள் !!!

அலை மோதின என்னுள்…

இன்றும்….

நான் போகும் போது.

அன்று..

என் அன்னையின் கை பிடித்து.

இன்று..

என் மகளின் கை பிடித்து..

எத்தனை அழகான காலங்கள் …

போகாமலே நனைகிறேன்

நினைவுகளில்..

கிராமம் தான்..

எங்குமில்லா அமைதி ..

கிடைக்காத பாசங்கள்..

பார்க்காத மனிதர்கள்..

புரியாத மொழிகள்..

அங்கு மட்டுமே..

வயல் வரப்பில் நான்

நடந்தேன் அழகாய்..

முடியவில்லை

என் மகளால் ..

புதிய பாதை அவளுக்கு..

அம்மா

இது தான் “ரைஸ் செடியா?”

ஆம் என்றேன்

அவளிடம்..

இது போல் குட்டி குட்டி கேள்விகள்

அவளுக்கு..

புரிய வைத்தேன் நான்

தென்னையில்

உள்ள தூக்கணாங் குருவி கூடு !

அழகிய வீடு !

அடித்த காற்றில் கீழே விழுந்தது போல்.

.என் குட்டி தேவதை

அதை எடுத்துக்கொண்டாள்..

அவளின் பார்பி பொம்மைக்கு

இனி அது வீடாம்..

தாகம் என்று நினைக்கையில்

தோட்டக்காரன் நின்றான்

இளநீரோடு!

ஆசை தீர தாகம் தனித்தோம்..

வயல்வெளியில்

விவசாயிகளின் பாடலோடு வேலை ..

புரியவில்லை அவளுக்கு..

புரிந்தது அவர்களின்

கபடமில்லா பாசம் ..

வயல் பார்த்து

பம்ப் செட்டில் குளித்து

தென்னை ஓலையில்

குட்டி தூக்கம் போட்டு

களைத்து வீடு வருகையில்..

வாசம் துளைத்தது

பாட்டி வைத்த மீன் குழம்பு..

ஆசையாய் சாப்பிட்டோம்

பாட்டியின் பாசத்தையும் சேர்த்து.

ஐயோ…  இன்னும் எத்தனையோ !!!

விவரிக்க வார்த்தைகள் போதாதே..

என் மகளுடன் நானும்

குழந்தையாய் ஏங்குகிறேன் ..

என்று வருமோ..

அடுத்த என் மகளின்

விடுமுறை நாட்கள் என்று ???

கிடைக்குமா ??

கல்லூரியின்  முதல் நாள் …

பிறந்த வீட்டை விட்டு

புகுந்த வீடிற்குள்

நுழைந்ததை போல் உணர்வு !!!

புதிய புதிய முகங்கள் …

பழகிய முகத்தை தேடின

என் விழிகள் !!!

ஏங்கியது என் மனம் ….

பள்ளியில் பழகிய சிநேகங்கள்

யாரேனும் உண்டா

புதிய் இடம் …

காட்டிற்குள் விட்டது

போல பயம்!!!

கல்லூரி முதல்வரின்

முதல் உரை ..

ஏகப்பட்ட அறிவுரைகள் …பள்ளிக்கே  ஓடிடலாம

என எண்ணங்கள்

ஓடின மனதினில் !!!

தனக்கென எழுதப்பட்ட

உரையை முடித்தார் …முதல்வர் !!!

வகுப்பறைக்கு சென்றேன் ….

சற்றே பள்ளியை விட

அழகாய் இருக்க…

கொஞ்சம் மகிழ்ந்தது

என் மனம் !!!

தனிப்பட்ட அறிமுகம் செய்தோம் ..

ஆசிர்யர்கள்

“உங்கள் நண்பர்கள் நாங்க” என்றனர் ..

அப்படியா ?

மகிழ்ச்சியில் என் மனம் …

முதல் இடை நிலை தேர்வுகள் …

ஆசிரியரின் சுயரூபம்

தெரிந்தது ..ஆம்

பள்ளியில் கூட வீடுபாடம்

இல்லீங்க ….இங்கே பக்கம் பக்கமாய் ….

புதிய முகங்களில் சிலர் …

ஆகினர் என் நண்பர்களாய் …

சில நேரம் சண்டைகள் …

நிறைய சந்தோசங்கள் ….

காலங்கள் சென்றன

கட கடவென !!!

கல்லூரியில்

சந்தோசமாய் கழிக்கும் இடம் …

எங்க கான்டீன் தாங்க!!!

சாப்டனும் என்று இல்ல

அரட்டை சும்மா …

சாப்பிட போனால் …

எங்க ராசி

எதுவும் கிடைக்காது !!

ஆனந்த லஞ்ச் டைம் —

ஆம் வித விதமாய் !!!

எல்லோர் உணவும்

எங்க உணவு தான் !!!

சந்தோசமாய் போன காலங்கள்…

.இதோ முடியும் நேரம் …

எங்க ஜூனியர்ஸ் …

எங்களை விரட்ட

ஏற்பாடு செய்த விழா !!!!

ம்ம்ம்ம் ..பேர்வெல் தாங்க !!!

மூன்று வருடம் சந்தோசமாய்

வாழ்ந்த ஒரு உலகினில் …

கடைசியாய் வாழும் அந்த நாள் …

எல்லோரும் மூழ்கினோம்

சோகத்தில் !!

சோகங்கள் …

சந்தோசங்கள் …

சண்டைகள் ..

வாழ்த்துக்கள் …

போட்டிகள் …

மன்னிப்புகள் ...

என வாழ்கையை கற்று தந்த அந்த காலம் ..

கேட்டாலும் நினைத்தாலும் திரும்ப கிடைக்காதது “


ஏன் ??

நீயில்லாத வாழ்க்கை

வண்ணங்கள் இல்லாத

வானவில் போலானது —

எனக்கு !!!

மறக்கவே நினைத்தேன்

அன்று — உன்னை !!!

இன்று நீ ..

நினைக்கவே மறுக்கிறாயா ??

ஒவ்வொரு நொடிகளையும்

உன் நினைவுகளால் கழிக்கிறேன் ……

. இன்று !!!

உன் நினைவுகளில்

ஒரு நொடியேனும்

என் நினைவுகள் ????

எல்லா அன்பையும் தந்தாய் !!!

என் இதயம் சுமை கண்டது …

இன்று எல்லா அன்பையும்

பறித்தாய் …

மேலும் சுமை கொண்டது !!

என் உயிர் உள்ள வரை !!


என்னை உணர்ந்த நாள்

உன்னை கண்ட முதல் நாள் !!!

என் நாட்கள் நகர மறுத்தன

உன்னை காணமல் ..

என் கண் பார்வை

உனக்காய் தவமிருந்தது …

என் உலகமே உருமாறி

போனது …உன் அன்பினால் ..

.நம் அன்பினை

நட்பென்று பெயர் சூட்டி கொண்டோம் ..

.பூவின் வாசத்தை தடுக்க

முடியுமா ?

நம் நட்பின் வாசம் காதலை பிறப்பித்தது..

யாருமே எட்ட முடியாத உயரத்தில் …

ஆனந்த களி பாடினோம் ..

நீ அருகினில் இல்லாத நேரங்களில்

நம் நினைவுகள் தாலாட்டுகிறது //

நீயும் உன் நினைவுகளும்

என்னுடனே ….’என் உயிர் உள்ளவரை !!

ஆசிரியர் !!!!

தன்னை கரைத்து ..
ஒளியை தருகிறது …
மெழுகுவர்த்தி !!!!

தன் அறிவை பகிர்ந்து
இன்னொரு மரத்திற்கு
வித்திடுவர்
ஆசிரியர் !!!!

ஆசரியர்  தின வாழ்த்துக்கள் !!!!

( நாம் எல்லோருமே நிறைய       ஆசிரியர்களை கடந்து வந்திருப்போம் ..இன்று நாம் எல்லோரும் அவர்களை
நினைவு கூர்ந்தால் நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை.. இப்பொழுது மாணவர்களாக இருந்தால் கண்டிப்பாக
வாழ்த்துக்கள் சொல்லலாம் .மிகவும் மகிழ்வர் ..)