Posts from the ‘சொல்ல நினைக்கிறன் !!!’ Category

தீவீரவாதம் !!

This slideshow requires JavaScript.

நேற்று ரஷ்யாவில் நடந்த ஒரு தற்கொலை படை சம்பவம் பற்றி அனைவரும் அறிந்திருப்போம் .காலையில் செய்தித்தாள் படிக்கும் போது அறிந்து கொண்டேன் .தீவீரவாதம் இப்போது மிகவும்

வருத்தப்பட வேண்டியுள்ளது என்னவென்றால் சம்பந்தமே  இல்லாதவர்கள் தான் இதில் பலியாகின்றனர் .

நம் இந்தியாவில் நடந்த மும்பை சம்பவத்தில் கூட ஏராளமானோர் பலியானர் .ஏன் தான் இப்படி எல்லாம் பண்றங்களோ? யார் மீது வெறுப்போ அவர்களை மட்டும் பலி வாங்கலாம் தானே .சின்ன குழந்தைகள் எல்லாம்  என்ன பாவம் பண்ணினார்கள் ? ஆனால் தீவரவாதிகளுக்கு தண்டனை சீக்கிரம் குடுக்கிறதும்இல்லை  நம் இந்தியாவில் ..அவனை வைத்து நிறைய பேரை கண்டு பிடிக்கிறோம் என்று ..பிடித்த ஒருவனையும் தவற  விட்டு விடுகின்றனர் .இன்னும் வருந்த வேண்டிய விஷயம் என்ன வென்றால் ..நம் ராணுவத்தில்  அதிகாரிகளே நிறைய தகவல்களை வெளி ராணுவத்திற்கு விற்கின்றனர் ..இந்திய பணத்தில் தன் வயிறை நிறைத்து விட்டு ..உளவு சொல்லும் இவர்களை என்ன பண்றது ? இவர்கள் இருக்கும் வரை தீவரவாதம் ஒழியவே ஒழியாது !!

( இது பற்றி உங்க கருத்துகளை சொல்லுங்கள் ..)

Advertisements

சாலை போர் ….

அழகிய காலை பொழுது !!!குழந்தைகள்  பள்ளிக்கு , பெண்கள் சமையல் அறையில் வெந்து கொண்டு இருகின்றனர் .
ஆண்கள் தங்களுக்காகவே செய்தி தாள்  எழுதியது போல படித்து கொண்டிருகின்றனர்.  எல்லோரும் இயந்திரம் போல
சுழன்று கொண்டே இருக்கின்றனர்.அடுத்து அவரவர் அவர்கள்   வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது .

சாலையில் எல்லோருமே போக வேண்டியுள்ளது ..அது ஒரு பெரிய கொடுமை தெரியுமா ?

சாலையில் போனால் வீடுக்கு வருவோமா என்பது பெரிய கேள்விக்குறியே ….ரேஸ் கு போக வேண்டியவர்கள் ellam சாலையில் தான் பயிற்சி எடுகின்றனர் போலும் ..யாரை முந்தலாம் ..யாரை கீழே தள்ளலாம் என்று.
ஒரு நாள் நான் கூட எனது வண்டியில் ஒட்டி கொண்டு போகும் போது தப்பி பிழைத்தேன் ..ரொம்ப ஆயுள் போல எனக்கு …சிக்னல் என்று உள்ளதையே நம்மவர்கள் மறந்து விடுகின்றனர். சிவப்பு நிறம் வந்தால் தான் போவேன் என்று
எத்தனை பேர்  அடம் பண்றாங்க தெரியுமா ? நம்ம அரசு பேருந்துக்கு தான் இதில் முதல் இடம் ..யாரையுமே கண்டு கொளவதில்லை ..இதனால் எவ்வளவு விபத்துகள் ??? அது போல இரண்டு சக்கர வகனங்களும்  சிக்னல் என்றாலும்
இரண்டு விளகுகலையும் எரிய விட்டு நான் பொய் கொள்கிறேன் என்றே வருகின்றனர்.

அதிலும் நம்ம டிராபிக் போலீஸ் இருக்கிறாரே ….” இருப்பார் ஆனால் இல்ல …” ரொம்பவே வெட்டியாக நின்று கொண்டிருபார்…அதனால் நம்மை நம் தான் பார்த்து கொள்ளனும்..கவனம் பொறுமை ரெண்டும் மிக அவசியம் …
பொறுமை என்பது எல்லோருக்குமே
அவசியம் ..எனக்கும் குறைவு தான் .ஆனால் முக்கியமான  நேரங்களில் பொறுமை அவசியமே …

.ஒரு சில நிமிடங்கள் தான் காத்திருக்கணும் ..காத்திருக்கலாமே !!!! ஒரு சில நொடிகளில் வாழ்கையே மாறி போகலாம் ..

சிக்னல்  பார்த்து  போங்க ….
ஆயிளோடு   இருங்க …
மத்தவங்களுக்கும்  ஆயுசை குடுங்க …

பாராட்டுகள் அவசியம் !!!!

இன்றைய உலகில் இலவசமாக கிடைப்பது எது தெரியுமா ??? விமர்சனம் ,உபதேசம் ..மட்டும் தான் ..
அதிலும் பக்கத்துக்கு வீட்டில் புதிய கார் வங்கி இருந்தாலோ …புது வீடு வாங்கி இருந்தாலும்
நம்மில் எத்தனை பேர் மனசார பாராட்டுகிறோம் ..அது சரி இல்ல …இது சரி இல்ல அப்படி எதோ குறை சொல்றோம் .
இதே தன பல பெரிய படங்கள் தோல்வி அடைகிரதுக்கு பெரிதும் காரணம்..படம் வெளி வந்து ஒரு காட்சி
முடிவதற்குள் இணைய தளத்தில்..படத்தில் ஒண்ணுமே இல்லையாம்…மொக்கை ..சப்பை ..என்றல்லாம்
போட்டு விடுகின்றனர் ..இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் ,நடிகர்கள் ,ஒவ்வொரு நபரும் எவ்வளவு மனதால்
கஷ்டபடுகின்றனர்..

ஒரு படமோ  ஒரு காரியமோ பண்றது அவ்வளவு எளிதில்ல ..எவ்வாளவோ கஷ்டபடுகின்றனர்..நம்மால் பாராட்ட முடியவில்லை என்றாலும் கிண்டல் பண்ணாமல் இருக்கலாம் .நம்மால் அவர்கள் பண்ணியதில் எவ்வளவு பண்ண முடியும் என்று யோசித்து விட்டு குறை கூறனும் ..பாராட்டுகள் இருந்தாலே நிறைய வெற்றிகள் வரும் யாருக்கும் ..
ஒருவரை எவ்வளவு கிண்டல் பண்றோமோ ..அவர்கள் மனதார வருத்த படுவர். அவர்களின் வளர்ச்சிகள் பாதிக்கும்.
ஒரு சின்ன குழந்தையிடம் very  good  என்று சொல்லி பாருங்கள் ..அடுத்த முறை இன்னும் அழகாக பண்ணும் ..அதுவே பாராட்டின் அதிசயம் ……எல்லோரோட மனசும் ஒரு சின்ன பாராட்டுக்கு தாங்க ஏங்கி கிடக்கு …. இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா ?????

நிறை சொல்ல முடியா விட்டாலும்
குறை சொல்லாமல் இருங்கள் ..