கிடைக்குமா ??

கல்லூரியின்  முதல் நாள் …

பிறந்த வீட்டை விட்டு

புகுந்த வீடிற்குள்

நுழைந்ததை போல் உணர்வு !!!

புதிய புதிய முகங்கள் …

பழகிய முகத்தை தேடின

என் விழிகள் !!!

ஏங்கியது என் மனம் ….

பள்ளியில் பழகிய சிநேகங்கள்

யாரேனும் உண்டா

புதிய் இடம் …

காட்டிற்குள் விட்டது

போல பயம்!!!

கல்லூரி முதல்வரின்

முதல் உரை ..

ஏகப்பட்ட அறிவுரைகள் …பள்ளிக்கே  ஓடிடலாம

என எண்ணங்கள்

ஓடின மனதினில் !!!

தனக்கென எழுதப்பட்ட

உரையை முடித்தார் …முதல்வர் !!!

வகுப்பறைக்கு சென்றேன் ….

சற்றே பள்ளியை விட

அழகாய் இருக்க…

கொஞ்சம் மகிழ்ந்தது

என் மனம் !!!

தனிப்பட்ட அறிமுகம் செய்தோம் ..

ஆசிர்யர்கள்

“உங்கள் நண்பர்கள் நாங்க” என்றனர் ..

அப்படியா ?

மகிழ்ச்சியில் என் மனம் …

முதல் இடை நிலை தேர்வுகள் …

ஆசிரியரின் சுயரூபம்

தெரிந்தது ..ஆம்

பள்ளியில் கூட வீடுபாடம்

இல்லீங்க ….இங்கே பக்கம் பக்கமாய் ….

புதிய முகங்களில் சிலர் …

ஆகினர் என் நண்பர்களாய் …

சில நேரம் சண்டைகள் …

நிறைய சந்தோசங்கள் ….

காலங்கள் சென்றன

கட கடவென !!!

கல்லூரியில்

சந்தோசமாய் கழிக்கும் இடம் …

எங்க கான்டீன் தாங்க!!!

சாப்டனும் என்று இல்ல

அரட்டை சும்மா …

சாப்பிட போனால் …

எங்க ராசி

எதுவும் கிடைக்காது !!

ஆனந்த லஞ்ச் டைம் —

ஆம் வித விதமாய் !!!

எல்லோர் உணவும்

எங்க உணவு தான் !!!

சந்தோசமாய் போன காலங்கள்…

.இதோ முடியும் நேரம் …

எங்க ஜூனியர்ஸ் …

எங்களை விரட்ட

ஏற்பாடு செய்த விழா !!!!

ம்ம்ம்ம் ..பேர்வெல் தாங்க !!!

மூன்று வருடம் சந்தோசமாய்

வாழ்ந்த ஒரு உலகினில் …

கடைசியாய் வாழும் அந்த நாள் …

எல்லோரும் மூழ்கினோம்

சோகத்தில் !!

சோகங்கள் …

சந்தோசங்கள் …

சண்டைகள் ..

வாழ்த்துக்கள் …

போட்டிகள் …

மன்னிப்புகள் ...

என வாழ்கையை கற்று தந்த அந்த காலம் ..

கேட்டாலும் நினைத்தாலும் திரும்ப கிடைக்காதது “


Advertisements

ஹி ! ஹி ! கடி ஜோக்ஸ் !!!

கிரீம் பிஸ்கட்ல கிரீம் இருக்கும். ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்காது .

மின்னல பார்த்தா கண்ணு போயிரும் ஆனா மின்னல பாக்காட்ட மின்னல் போயிரும் .

லஞ்ச் பேக்ல லஞ்ச் எடுத்துட்டு போகலாம் ஆனா ஸ்கூல் பேக்ல ஸ்கூல எடுத்துட்டு போக முடியாது.

மெழுகு வச்சு மெழுகு வத்தி செய்யலாம் ஆனா கொசுவ வச்சி கொசு பத்தி செய்ய முடியாது

பச்சை மிளகால பச்சை கலர் இருக்கும், ஆனா குடை மிளகால குடை இருக்காது.


ஏன் ??

நீயில்லாத வாழ்க்கை

வண்ணங்கள் இல்லாத

வானவில் போலானது —

எனக்கு !!!

மறக்கவே நினைத்தேன்

அன்று — உன்னை !!!

இன்று நீ ..

நினைக்கவே மறுக்கிறாயா ??

ஒவ்வொரு நொடிகளையும்

உன் நினைவுகளால் கழிக்கிறேன் ……

. இன்று !!!

உன் நினைவுகளில்

ஒரு நொடியேனும்

என் நினைவுகள் ????

எல்லா அன்பையும் தந்தாய் !!!

என் இதயம் சுமை கண்டது …

இன்று எல்லா அன்பையும்

பறித்தாய் …

மேலும் சுமை கொண்டது !!

நினைவில் நனைகிறான்

பூஞ்சோலை ! பெயரைப் போலவே அழகான குட்டி ஊர். மேற்கு மலையில் உள்ள குளுகுளு ஊர். அங்கே ஓர் அழகான கான்வென்ட் ஸ்கூல்.  மணி மாலை நான்கு .  ஸ்கூல் பெல் அடித்து விட்டது.  அம்மா அப்பா வந்து பிள்ளைகளை கூப்பிட்டு போகத் தொடங்கினர்.

ஷாம்.  ஒன்றாவது படிக்கும் துறுதுறு குழந்தை.  ஸ்கூல் பாக் , லஞ்ச் பேகோடு அம்மாவுக்காக காத்திருந்தான். ச்சே ! என்ன அம்மா இது ! அப்பான்னா கரெக்டா வந்திடுவாங்க ! ஊருக்கு போயிருக்கும் அப்பா சீக்கிரம் வந்திடுவங்கன்னு அம்மா சொன்னாங்களே !  கொஞ்ச நேரம் போனது.

ஷாம்.  ஒன்றாவது படிக்கும் துறுதுறு குழந்தை.  ஸ்கூல் பாக் , லஞ்ச் பேகோடு அம்மாவுக்காக காத்திருந்தான். ச்சே ! என்ன அம்மா இது ! அப்பான்னா கரெக்டா வந்திடுவாங்க ! ஊருக்கு போயிருக்கும் அப்பா சீக்கிரம் வந்திடுவங்கன்னு அம்மா சொன்னாங்களே !  கொஞ்ச நேரம் போனது.

ஷாம் தானாகவே வீட்டுக்கு கிளம்பி விட்டான்.  மழை வரும் போல் மேகம் இருந்தது.  ஸ்கூல் க்கு வெளியே ஐஸ் கிரீம் கடை. ஷாமின் அப்பா அவ்வப்போது அவனுக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுப்பார்.  மலை பிரதேஷம் என்பதால் அப்பா அவனை நடந்து வந்துதான் கூப்பிட்டு உப்பு மூட்டை ஏற்றிக் கொண்டு கதை சொல்லிக் கூப்பிட்டுப் போவார்.  அவனும் ஐஸ் கிரீம் வாங்கிக் கொண்டான்.  கதை சொல்லத்தான் அப்பா இல்லை.

மழை லேசாகத் தூறியது.  ஷாம் ஒரு கையில் லஞ்ச் பாக் , மறு கையில் ஐஸ் கிரீம் என்று நடக்கத் தொடங்கினான்.  மழைக்கு எங்காவது ஒதுங்கலாம் என்று நினைத்தான்.  சுற்றிலும் மரங்கள் மட்டுமே.  மழை பெய்யும் போது மரத்தின் கீழ் நிற்கக் கூடாது என்று அப்பா சொன்னது ஞாபகம் வந்தது.  கொஞ்சம் வேகமாய் நடக்கத் தொடங்கினான். கால் வலிக்கத் தொடங்கியது.  ஷாமுக்கு அப்பாவின் உப்பு மூட்டை ஞாபகம் வந்தது .சே ! அப்பா வந்ததும் ஜாலியாய் உப்பு மூட்டை ஏறனும் என்றான் .

நடக்கும்  போதே ” கலைவாணி ” தியட்டர் ..வந்தது ..நிறைய பேர் மழைக்கு ஒதங்கி இருந்தனர் .ஷாமும் ஒதுங்கினான் .” வேட்டைக்காரன் ” விஜய் சாமை பார்த்து சிரிக்கிறான் .ஷாமும் சிரித்தான் .என்னவோ ஷாமுக்கு விஜய் என்றால் அவ்வளவு பிடிக்கும் .அப்பாவுக்கு சினிமா பிடிக்காது .விஜய் படம் என்றால் அப்பா கூட்டிட்டு போவர் .ஒரு கையில் ஐஸ் க்ரீம் .இன்னொரு கையில் பாப்கார்ன் என்று சாம் படம் பார்க்கும் அழகே தனி …அப்பா வந்ததும் கண்டிப்பா வேட்டைக்காரன் பார்க்கணும் எப்று நினைத்து கொண்டான் மனதினில் ….

மழை கொஞ்சம் குறைந்தது ..ஷாமும் வீடிருக்கு கிளம்பினான் .அப்பாவின் நெருங்கிய நண்பர் சாமை பார்த்தார் ..சாம் வா … நன் கொண்டு பொய் விடுகிறேன் என்றார் ..இல்லை அங்கிள் ..அப்பா யாரையும் தொந்தரவு பண்ண கூடாது என்ற சொல்லிருகாங்க …அனால் ஒரே ஒரு உதவி பண்ணுங்க …அப்பாவை சீக்கிரம் வர சொல்லுங்க என்று சொல்லி விட்டு போய் விட்டான்.

வீடு  நெருங்கி விட்டது ..இந்த பூங்காவை தாண்டினால் போதும் ..ஷாமின் அப்பாவிருக்கு கிரிக்கெட் பிடிக்கும் ..அம்மா அப்பா ஷாம் மூவரும் இங்கே தான் கிரிக்கெட் விளையாடுவர் ..அப்பா வந்ததும் கிரிக்கெட் விளையாடனும் என்று மனதினில் நினைத்து கொண்டான் .

வீடு வந்து விட்டன் சாம் .அழகான குட்டி வீடு ..அதை சுற்றி தோட்டம் ..அதில் மழை பெய்தால் சாம் அப்பா இருவரும் ஆடும் ஆட்டமே தனி .எல்லோரும் சேர்ந்து மழையில் நனைந்து விளையாடுவர் . அதையும் நினைத்து கொண்டான் .

காலிங் பெல் அமுக்கினான். அம்மா நிர்மலா வந்தாள். என்ன அம்மா ! ஏன் சீக்கிரம் வரலை! மழை பெய்ததுடா! கொஞ்சம் லேட்டாக வரலாமென்று நினைத்தேன். ஏம்மா ! அப்பா இன்னைக்கு ஊரில் இருந்து வந்துடுவாங்களா ! கால் ரொம்ப வலிக்குதும்மா ! ஷாம் பாவமாய் அம்மாவைப் பார்த்தான்.  நிர்மலாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ஆனால் சுவரில் மாட்டி இருந்த அப்பா ” ரமேஷின் ” போட்டோ மட்டும் அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

ஆம் ! ஆபீஸ் வேலையை மும்பை சென்ற போது அங்கு நடந்த தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் பலியான அப்பாவி மனிதர்களில் ரமேஷும் ஒருவன். இன்று அவனின் மகன் அனாதையாய் நிற்கிறான். ஊரே அறிந்த தன் அப்பாவின் மரணம் பாவம் இந்த பிஞ்சு குழந்தைக்கு தெரிய வில்லை

நிர்மலா அழுகையை அடக்க முடியாமல் ” ஒ ” வென அழத் தொடங்கினாள்.  கூடவே வெளியே மழையும் பெரிதாய் அழத் தொடங்கியது.  அம்மாவின் அழுகை புரியாமல் ஷாம் மழையில் தன் அப்பாவின் நினைவுகளோடு விளையாட ஆரம்பித்தான்

காலம் தான் சொல்லும் இந்த பிஞ்சு மனதிற்கு பதில் ...


என் உயிர் உள்ள வரை !!


என்னை உணர்ந்த நாள்

உன்னை கண்ட முதல் நாள் !!!

என் நாட்கள் நகர மறுத்தன

உன்னை காணமல் ..

என் கண் பார்வை

உனக்காய் தவமிருந்தது …

என் உலகமே உருமாறி

போனது …உன் அன்பினால் ..

.நம் அன்பினை

நட்பென்று பெயர் சூட்டி கொண்டோம் ..

.பூவின் வாசத்தை தடுக்க

முடியுமா ?

நம் நட்பின் வாசம் காதலை பிறப்பித்தது..

யாருமே எட்ட முடியாத உயரத்தில் …

ஆனந்த களி பாடினோம் ..

நீ அருகினில் இல்லாத நேரங்களில்

நம் நினைவுகள் தாலாட்டுகிறது //

நீயும் உன் நினைவுகளும்

என்னுடனே ….’என் உயிர் உள்ளவரை !!

தேங்காய் சாதம் !!

தேவையான பொருட்கள் :

வடித்த சாதம் — உதிரியாக ஒரு கப்

கடலை பருப்பு — கொஞ்சம்

முந்திரி — கொஞ்சம்

கிஸ்மிஸ் — கொஞ்சம்

கருவேப்பிலை –கொஞ்சம்

காய்ந்த மிளகாய் –கொஞ்சம்

கடுகு , உளுந்த பருப்பு  –கொஞ்சம்

தேங்காய் துருவல் – ஒரு கப்

செய்முறை :

  • முதலில் கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கடுகு ,உளுந்த பருப்பு போட்டு தாளிக்கவும் .
  • அடுத்து முந்திரி ,கிஸ்மிஸ் ,கருவேப்பிலை ,காய்ந்த மிளகாய் ,கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்
  • பின்னர் தேங்காய் துருவலை நன்றாக வதக்கி ,,சாதம் சேர்த்து கிளறவும் .தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
  • சேர்த்து கிளறவும்
  • சூடாக சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் நல்ல இருக்கும் ..
  • சாதம் மீந்து போனால் இப்படி செய்து காலி பண்ணலாம்


தீவீரவாதம் !!

This slideshow requires JavaScript.

நேற்று ரஷ்யாவில் நடந்த ஒரு தற்கொலை படை சம்பவம் பற்றி அனைவரும் அறிந்திருப்போம் .காலையில் செய்தித்தாள் படிக்கும் போது அறிந்து கொண்டேன் .தீவீரவாதம் இப்போது மிகவும்

வருத்தப்பட வேண்டியுள்ளது என்னவென்றால் சம்பந்தமே  இல்லாதவர்கள் தான் இதில் பலியாகின்றனர் .

நம் இந்தியாவில் நடந்த மும்பை சம்பவத்தில் கூட ஏராளமானோர் பலியானர் .ஏன் தான் இப்படி எல்லாம் பண்றங்களோ? யார் மீது வெறுப்போ அவர்களை மட்டும் பலி வாங்கலாம் தானே .சின்ன குழந்தைகள் எல்லாம்  என்ன பாவம் பண்ணினார்கள் ? ஆனால் தீவரவாதிகளுக்கு தண்டனை சீக்கிரம் குடுக்கிறதும்இல்லை  நம் இந்தியாவில் ..அவனை வைத்து நிறைய பேரை கண்டு பிடிக்கிறோம் என்று ..பிடித்த ஒருவனையும் தவற  விட்டு விடுகின்றனர் .இன்னும் வருந்த வேண்டிய விஷயம் என்ன வென்றால் ..நம் ராணுவத்தில்  அதிகாரிகளே நிறைய தகவல்களை வெளி ராணுவத்திற்கு விற்கின்றனர் ..இந்திய பணத்தில் தன் வயிறை நிறைத்து விட்டு ..உளவு சொல்லும் இவர்களை என்ன பண்றது ? இவர்கள் இருக்கும் வரை தீவரவாதம் ஒழியவே ஒழியாது !!

( இது பற்றி உங்க கருத்துகளை சொல்லுங்கள் ..)